தமிழ்த்துறை
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையில், கொங்கு மண்டலத்தின் மணிமகுடமாய் திகழ்ந்து வரும் கல்வி நிறுவனம் சேரன் கல்விக் குழுமம். 2000-ஆம் ஆண்டு ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலக் கல்வியின் நோக்கத்தை உணர்ந்து குறைந்த கட்டணத்தில் நிறைவான கல்வியைக் கொடுக்கும் நோக்கத்தில் சுடர்விளக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி, இன்று கால்நூற்றாண்டை நெருங்கி அகிலத்திற்கெல்லாம் ஞான ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. எமது கல்லூரியில் சீர்மிகு துறைகளில் ஒன்று தமிழ்த்துறை. 2000-த்தில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் முதலில் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கும் துறையாக இருந்தது. பிறகு 2018-ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
- படிப்பு பி.ஏ தமிழ்
- சேர்க்கைத் தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
(தமிழ்மொழிப்பாடத்துடன்) பெற்றிருத்தல் வேண்டும்.
- ஒலி,ஒளி வசதியுடன் வகுப்பறை
- இணையவழிக் கல்வி
- அறமும்,நீதியும் இலக்கியங்கள் வாயிலாக கற்றுக்கொடுத்தல்.
- நாட்டுப்புற கலைகளைக் கற்றுக் கொடுத்தல்.
- ஓலைச்சுவடி,கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெறல்.
- போட்டித் தேர்வுகளுக்கு மொழிப்பாடம் தொடர்பான பயிற்சி அளித்தல்.
- கவிதை,கட்டுரை,பேச்சு ஆகியவற்றிக்கான பயிற்சி பெறல்.
- தமிழ் மென்பொருளுடன் கூடிய கணிப்பொறிக் கூடம்.
- தமிழாசிரியர்
- உள்நாடு மற்றும் தமிழர் வாழும் வெளிநாடுகளில்
தமிழாசிரியர் பணி
- இதழியலாளர்,
- தொல்லியல் துறை
- அரசு குடிமைப்பணியாளர்,
- ஊடகவியலாளர்
- கவிஞர்
- படைப்பாளர்
- தமிழ் மென்பொறியாளர்
துறை சார்ந்த நோக்கங்கள்
- அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி பற்றிய அடிப்படை அறிவை வழங்குதல்.
- தமிழ் இலக்கியங்களில் உள்ள அறமும் நீதியும் மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்.
- சங்க இலக்கியம் முதல் நவீன யுகம் வரை தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்பித்துக் கொடுத்தல்.
- பெண்ணியம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- வேலை வாய்ப்புத் திறன்கள் மேம்படுத்தும் நோக்கில் வினா விடைகளை உருவாக்கிக் கொடுத்தல்.
- ஊடகவியல் மற்றும் பத்திரிக்கைத் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளித்தல்.
- தமிழ் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பெறும் வகையில் கலைப்போட்டிகள் நடத்துதல்.
குறிக்கோள்
- மொழி மற்றும் இன உணர்வோடு கூடிய இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.
- சகோதரத்துவத்துடன் கூடிய மாணவ சமுதாயத்தினை உருவாக்குதல்.
- தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களை ஆராயும் மையமாக செயல்படுதல்.
Faculty Profile
V.Sasikumar
Assistant Professor
NSS Programme Officer
Mobile : 80 15 56 64 63 Email : velusasi92@gmail.com
R.Rethiga
Assistant Professor
Mobile : 96 56 55 67 35
Email : rethiga93@gmail.com
- வஞ்சித்தமிழ் இலக்கிய மன்றம்.
இளங்கலைத்தமிழ், மூன்றாமாண்டு
இளங்கலைத்தமிழ், இரண்டாமாண்டு
- பொருளர் மா.சித்ரா இளங்கலைத்தமிழ், இரண்டாமாண்டு
அனைத்து வகுப்புப் பிரதிநிதிகள்